தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அமைச்சர் தொடர் உண்ணாவிரதம்: திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

தில்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை முதல் கால வரையறையற்ற
தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அமைச்சர் தொடர் உண்ணாவிரதம்: திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

 புதுதில்லி: தில்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை முதல் கால வரையறையற்ற உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும்,  கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம்  8-ஆவது நாளாக இன்று திங்கள்கிழமையும் தொடர்ந்தது.

மேலும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமையும்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் தொடங்கிய கால வரையறையற்ற உண்ணாவிரதம் தொடர்ந்தது.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லம் நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17)  மாபெரும் பேரணியை ஆம் ஆத்மி கட்சி நடத்தினர். 

இந்நிலையில், கால வரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவர் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றர். கடந்த நான்கு நாட்களில் 7 கிலோ எடை குறைந்துள்ளதுடன். அவரது உடலின் சர்க்கரை அளவு குறைந்தும், ரத்த அழுத்தம் 110/70 என்ற நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com