ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 8000 ரூபாய் உதவித் தொகை: ஹரியானா அரசு அறிவிப்பு

ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு இன்று அறிவித்தது.
ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 8000 ரூபாய் உதவித் தொகை: ஹரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்:  ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு இன்று அறிவித்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா சமூக நீதித்துறை அமைச்சர் கிருஷ்ணன் குமார் பேடி ‘‘ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கும் திட்டத்திற்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் அளித்துள்ளார்’’ ‘‘மேலும், மாநில அரசின் சார்பில் நியாயவிலை கடைகளுக்கான ஒதுக்கீட்டில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த உதவிகளை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் பட்டியலின் இரண்டாம் பிரிவில் உள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்’’ என அமைச்சர் கிருஷ்ணன் குமார் பேடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com