தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்: தலைமை நீதிபதி கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்: தலைமை நீதிபதி கருத்து

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு கருத்து தெரிவித்தது.    

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற 100வது நாளாக நடைபெற்ற போராட்டதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி ரஜினிகாந்த் என்ற வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எத்தனை பேர் உண்மையில் உயிரிழந்தனர்? என்ற விவரத்தை வெளியிடவும், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியிருந்தார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரிப்பதே சரியானதாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது.  

மேலும் இந்த வழக்கு குறித்து சிபிஐ-யை அனுகவும் மனுதாரருக்கு யோசனை வழங்கி உள்ளனர்.  

சிறப்பு விசாரணை குழு கோரிய வழக்கு தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com