நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா? ஸ்ரீ ராம் சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு

மூத்த பத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோரே,
நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா? ஸ்ரீ ராம் சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு


பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் ஸ்ரீராமசேனே அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

கர்நாடகா மாநிலம் பெங்களூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதியன்று மூத்த பத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்ததே கொல்லப்பட்டதற்கான காரணம் என சொல்லப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோரே, சிறப்பு புலனாய்வுப் படையின் (எஸ்ஐடி) விசாரணையில் உள்ளார். தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஸ்ஐடி வட்டாரம் தெரிவித்துள்ளது.

பரசுராம் வாக்மோரே, விஜயபுரா மாவட்டத்தின் ஸ்ரீராமசேனே அமைப்பின் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்காற்றி வந்துள்ளார். எனினும், பரசுராம் வாக்மோரேவுக்கும், ஸ்ரீராமசேனே அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கெளரிலங்கேஷ் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் கொலைகளில் ஸ்ரீராமசேனே அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை. ஸ்ரீராமசேனேவுக்கும், வாக்மோரேவுக்கும் சம்பந்தமில்லை. அவர் எங்கள் அமைப்பின் உறுப்பினரும் இல்லை, ஊழியரும் இல்லை. 

2012 ஜன.1-ஆம் தேதி விஜயபுரா மாவட்டத்தின் சிந்தகி வட்டாட்சியர் அலுவலகத்தில் மதக் கலவரத்தை தூண்டுவதற்காக பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பான வழக்கில் கைதான பரசுராம் வாக்மோரே, ஸ்ரீராமசேனே அமைப்பின் உறுப்பினர் என்று கூறப்பட்டது. பரசுராம் வாக்மோரே, ஸ்ரீராமசேனே உறுப்பினர் அல்ல, மாறாக ஆர்எஸ்எஸ் என்பதை அப்போதே நிரூபித்துள்ளேன். பரசுராம் வாக்மோரே ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை அப்போதே வெளியிட்டு தெளிவாக தெரிவித்திருந்தார். .

இதனிடையே கெளரிலங்கேஷ் கொலை சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.  

இதற்கு, ஸ்ரீ ராம் சேனா அமைப்புத் தலைவர் பிரமோத் முத்தாலிக், ஷகர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது பகுத்தறிவுவாதிகள், பத்திரிகையாளர்கள் என நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைபற்றி, யாரும் கேள்வி எழுப்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி என்று விமர்சிக்கவில்லை. ஆனால், கெளரிலங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேச மறுக்கிறார்? இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காத்துவருவது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர். 

கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா என்ன?' என்று பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com