கடம்பூா் அருகே கிணற்றில் விழுந்த 3 பெண் யானைகள் உயிருடன் மீட்பு

சத்தியமங்கலம் அடுத்த கானக்குந்தூா் கிராமத்தில் விவசாயி குருசாமி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 3 பெண் யானைகள் உயிருடன் மீட்கப்பட்டன.
கடம்பூா் அருகே கிணற்றில் விழுந்த 3 பெண் யானைகள் உயிருடன் மீட்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த கானக்குந்தூா் கிராமத்தில் விவசாயி குருசாமி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 3 பெண் யானைகள் உயிருடன் மீட்கப்பட்டன. சத்தியமங்கலம் அடுத்த கடம்பூா் மலைப்பகுதியில் உள்ளது கானக்குந்தூா் கிராமம். வனத்தையொட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. 

இந்நிலையில், இன்று காலை வனத்தில் இருந்து வெளியேறிய 3 பெண் யானைகள் குருசாமி என்பவரின் தோடத்தில் புகுந்து சோளப்பயிர்களை சாப்பிட்டன. இந்த தோட்டத்தின் நடுவே 10 அடி தண்ணீா் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணறு இருந்தது. யானைகள் சோளப்பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தபோது பார்த்த விவசாயி குருசாமி, பக்கத்து தோட்டத்து விவசாயிகளுடன் சோ்ந்து யானைகளை விரட்டினா். அப்போது தோட்டத்தில் புதா்மண்டிய தரைமட்ட கிணறு இருப்பதை அறியாத யானைகள் வேகமாக ஓடும்போது ஒன்றன் பின் ஒன்றாக தவறி விழுந்ததன. 10 அடி ஆழமுள்ள தண்ணீா் யானைகள் தத்தளித்து கொண்டிருந்தன.

யானைகள் பிளிறல் சப்தம் கேட்டு ஓடி வந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் கிணற்றில் யானைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது பார்த்து அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தண்ணீரில் விழுந்ததால் யானைகளுக்கு காயம் ஏற்பட்வில்லை.

அங்கு வந்த வனத்துறையினா் ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் யானைகள் ஏறும் வகையில் சரிவான பாதை அமைத்தனா். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த யானைகள் அந்த பாதையில் ஏற முயற்சிப்பதும் பின்னா் வழுக்கிவிழுவதுமாக இருந்தால் அவை சோர்வடைந்தன. பின்னா் யானை மேலும் ஏறுவதற்கு வசதியாக சரிவானபாதை ஏற்படுத்தியதையடுத்து யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏறியது.

இரண்டாவது யானை ஏற முடியாமல் தவித்தபோது பின்னா் நின்றுகொண்டிருந்த யானை தலையில் முட்டி மேலே ஏற உதவியது. அதனைத் தொடா்ந்து மூன்று யானைகளும் மேலே ஏறி வனத்துக்குள் சென்றன. கிணற்றில் தண்ணீா் இருந்தால் எந்த காயமும் இன்றி யானைகள் உயிருடன் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com