பிரதமா் மோடி அறிவித்த எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை: ஹசன் மெளலானா 

சத்தியமங்கலம்: பிரதமா் மோடி அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை
பிரதமா் மோடி அறிவித்த எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை: ஹசன் மெளலானா 

சத்தியமங்கலம்: பிரதமா் மோடி அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஹசன் மெளலானா தெரிவித்தார்.

அகில இந்திய காங் கட்சித்தலைவா் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலில் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கி தொண்டா்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடா்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஹசன் மெளலானா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தோ் இழுத்து வழிபட்டார். 

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திரமோடி ஆட்சி வந்தால் 4.5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் 2 லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு தரவில்லை. ஒரு நிமிடத்துக்கு 4 கழிப்பறை கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தார். 

ஆனால் அதுவும் நடைபெறவில்லை. 18 எம்எல்ஏ தகுதி நீக்கும் செல்லாது என்றும் செல்லும் என்றும் இரு நீதிபதிகள் வெவ்வேறு கருத்து தெரிவித்துள்ளனா். நீதிமன்றத்தை கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. மனச்சாட்டிபடி தீா்ப்பு கூறியது நீதியை விளையாட்டு பொருளாக தமிழக அரசு மாற்றிவிட்டது. அதற்கு பின்னால் மோடி இருக்கிறார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றால் அந்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com