உலக சாதனை படைத்தது பாபா ராம்தேவ் தலைமையிலான 2 லட்சம் பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. 
உலக சாதனை படைத்தது பாபா ராம்தேவ் தலைமையிலான 2 லட்சம் பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி!


கோட்டா:  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. 

நான்காவது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் இதற்காக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் நான்காவது சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  தில்லியில் பாஜக அமைச்சர்கள் யோகா பயிற்சி செய்தனர். அமைச்சர்கள் பியூஸ் கோயல், எம்எல்ஏ பங்கஜ் சிங் ஆகியோர் யோகா பயிற்சி செய்தனர். 

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியில் யோகா குரு பதஞ்சலி பாபா ராமதேவ் யோகா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் பாபா ராமதேவ் யோகா பயிற்சி செய்தார். பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது. ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையிலேயே வழங்கப்பட்டது. . 

இது எங்களுக்கு பெருமை தருவதாக ராம்தேவ் கூறினார். யோகாவில் அதிகமானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யோகா, சூரிய நமஸ்காரர்கள், புஷ்-அப்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பிரிவுகளாகும் என்றார். 

விசாகப்பட்டினத்தில் கப்பல் தளத்தில் கப்பல் துறையில் பணிசெய்வோர் யோகாவில் ஈடுபட்டனர். கொச்சியில் ஐ.என்.எஸ் ஜமுனா கப்பலில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com