8 வழிச்சாலைக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர்: முதல்வர் பழனிசாமி

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கான எல்லைக்கல் நடப்பட்டிருக்கின்றன. 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான
8 வழிச்சாலைக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர்: முதல்வர் பழனிசாமி

சேலம்: சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கான எல்லைக்கல் நடப்பட்டிருக்கின்றன. 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை - சேலம் விரைவு சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றன; சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை 

பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது; மாநில அரசு அதற்கு உதவி செய்கிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு தண்ணீர் வழங்கும் 

போராட்டத்தில் ஈடுபடுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாலே கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சேலம் இரும்பாலை தனியார்மயம் ஆவதை பிரதமர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com