இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு பிடிவாரண்டு: வருவாய் புலனாய்வுத்துறை அனுப்பி வைப்பு

பி.என்.பி வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல்
இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு பிடிவாரண்டு: வருவாய் புலனாய்வுத்துறை அனுப்பி வைப்பு


பி.என்.பி வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.

நிரவ்மோடியின் கீதாஞ்சலி குரூப் கம்பெனிகள் செய்த இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதோடு நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அவர்களது அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டது. இதே போல வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கினர்.

இந்நிலையில், தப்பி ஓடிய நிரவு மோடிக்கு சூரத் கோர்ட்டு சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது, இந்த சம்மன் அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.  இதற்கிடையே தப்பி ஓடிய நிரவ் மோடி, லண்டனில் உள்ள அவரது நகைக்கடை மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com