சுடுகாட்டில் இரவு முழுவதும் தூங்கி பேய்கள் இல்லை என நிரூபித்த எம்.எல்.ஏ

தொழிலாளர்கள் பயத்தை போக்குவதற்காக சுடுகாட்டில் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்கி நிருபித்துள்ளார் தெலங்கு தேசம் எம்.எல்ஏ. நிம்மல
சுடுகாட்டில் இரவு முழுவதும் தூங்கி பேய்கள் இல்லை என நிரூபித்த எம்.எல்.ஏ

ஆந்திரப் பிரதேசம்: தொழிலாளர்கள் பயத்தை போக்குவதற்காக சுடுகாட்டில் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்கி நிரூபித்துள்ளார் தெலங்கு தேசம் எம்.எல்ஏ. நிம்மல ராமா நாயுடு.

நிம்மல ராம நாயுடு, தனது தொகுதியின் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகோலில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சுடுகாட்டை நவீனப்படுத்துவதும் விதமாக கழிவறைகள் மற்றும் பூங்கா அமைப்பதற்கான பணிகளும் நடந்து வந்துள்ளன. ஆனால், சுடுகாட்டை நவீனப்படுத்துவதற்கான பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.  

இதையடுத்து சுடுகாட்டை நவீனப்படுத்தும் வேலையில் தொழிலாளர்கள் புனரமைப்பு பணிக்காக பூமியை தோண்டியபோது இறந்தவர்களின் சடலங்கள் எழுந்துவரும் என்றும் பேய்கள் பிடித்துக்கொள்ளும் என்று பயந்துகொண்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் திரும்பிச் செல்வதால் தாமதம் ஏற்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாகவும், அதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பாலகோலில் உள்ள சுடுகாட்டில் ஒன்றில் இரவு உணவுக்கு பின்னர், இரவு முழுவதும் அங்கே படுத்து தூங்கியுள்ளார் எம்.எல்ஏ. நிம்மல ராம நாயுடு.

இதுகுறித்து அவர் கூறுகையில், இரவு முழுவதும் சுடுகாட்டில் தனிமையில் தான் படுத்து தூங்கினேன். அங்கு பேய்கள் அல்லது தீய சக்திகள் எதுவும் இல்லை என்றும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பயத்தை போக்குவதற்காக சுடுகாட்டில் தூங்கினதாக கூறினார். மேலும், சந்தேகம் இருந்தால், இன்னும் சில இரவுகள் அங்கு தூங்குவதாகவும் உறுதி அளித்தார். 

அடுத்த நாள் சனிக்கிழமை (ஜூன் 23), எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் மறு கூட்டம் நடைபெற்றது. 

தெலுங்கு தேச எம்.எல்.ஏவின் இந்த செயலை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

"ராம நாயுடுவின் முயற்சிகள் ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல என்றும் அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது போராட்டம். தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும் என கூறியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com