கேரளாவில் கன்னியாஸ்திரி 13 முறை பாலியல் பலாத்காரம்: பிஷப் மீது நடவடிக்கை கோரி புகார்

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது
கேரளாவில் கன்னியாஸ்திரி 13 முறை பாலியல் பலாத்காரம்: பிஷப் மீது நடவடிக்கை கோரி புகார்


கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரில், ‘முதன் முதலாக 2014-ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்  செய்தார் பிஷப் பிராங்கோ. தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் இதுவரை நடவடிக்க எடுக்கவில்லை என்பதாலேயே தற்போது காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப் முல்லாக்கலும் புகார் அளித்துள்ளார். ’இங்கிருந்து அவரை டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவரது உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்றார்கள். பின்னர் மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர்’ என்று பிஷப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கோட்டயம் காவல்துறை அதிகாரி ஹரிசங்கர் கூறுகையில், ‘இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளதால், இதுகுறித்து குரவிலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு துணை காவல்கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒரு உயரதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.  

கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை சர்ச் அதிகாரிகளிடமிருந்து எந்தவித எதிர்ப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com