சமூக ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

சமூக ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சமூக ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

சமூக ஊடகங்களில் துடிப்பாக செயல்பட்டு வரும் மோடி, 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி தான் பிரதமராக அமைவதற்கு பிரசாரங்களைக் காட்டிலும் சமூக ஊடகங்களில் பரவப்பட்ட பயனுள்ள தகவல்களே முக்கிய காரணமாக அமைந்தது.

சமூக ஊடகங்களின் ஆதரவாளரான மோடி, 2014 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், சமூக ஊடகங்கள் ஒரு அரசியல் துறைக்கு மட்டுமல்ல, பில்லியன் கணக்கான மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கக்கூடிய தகவல்களின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

"மக்களோடு இணைப்பதற்கு எனக்கு உதவுகின்ற நெடுஞ்சாலையாக சமூக ஊடகங்களை ஒரு ஆதாரமாகக் கொண்டு வந்தேன்" என்று மோடி கூறினார். 

தனது அரசியல் வலிமையை அதிகரிப்பதற்காக சமூக ஊடகங்களில் இருந்து பெற்ற அறிவு மற்றும் இணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட மோடி, "என்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு நான் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில்லை, ஆனால் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளுகிறேன்" என்றார்.

டுவிட்டரில் 43.2 மில்லியன் ஆதரவாளர்களுடன், முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு பிறகு உலகில் மூன்றாவது மிகப்பெரிய அரசியல் ஆளுமை கொண்டவராக பிரதமர் மோடி ிருந்து வருகிறார். 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை (ஜூன் 30) உலகம் முழுவதும் சமூக ஊடக தினம் கொண்டாடப் படுவதையடுத்து, பிரதமர் மோடி அனைவருக்கும் டுவிட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அனைவருக்கும் சமூக ஊடக தின நல்வாழ்த்துகள். சமூக ஊடகமானது, நமது எண்ணப் பரிமாற்றங்களை ஜனநாயகப்படுத்த ஒரு முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலக முழுவதும் உள்ள பல மில்லியன் மக்கள் தங்கள் கருத்துகளையும் சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் உலகில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. 

இந்நாளில், சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தும் எனது இளம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளை குறிப்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் அவர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது என்றும் இளைஞர்கள் தங்கள் கருத்துகளை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com