டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி 

டெக்சாஸ் மாநிலத்தில் விமான நிலையத்தில் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வியாழக்கிழமை அவசரமாக தரையிறங்கிய விமானம் விழுந்து
டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி 

டெக்சாஸ் மாநிலத்தில் விமான நிலையத்தில் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வியாழக்கிழமை அவசரமாக தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை பைப்பர்-31 என்ற சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆகி உயரே பறந்த சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். 

இதையடுத்து உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார். ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்த விமானம் புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.  

அந்த விமானம் பிரவுனி நகரிலிருந்து மார்ஷல் விமான நிறுவனத்தின் சிஇஓ ராபர்ட் மார்ஷல் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பயணித்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 

விமான விபத்து காரணமாக லாரெடோ விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

பைபர்-31 விமான எந்திரங்களில் ஒன்லிருந்து புகை வெளிவந்தை கண்ட விமானி, விமானத்தை லாரெடோ விமான நிலையத்திற்கு திருப்பி ஓடுபாதையின்  கீழே சென்றபோது தீ விபத்து நிழந்துள்ளதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் செய்தி தொடர்பாளர் லின் லன்ஸ்ஸ்போர்டு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com