மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை தீ: மீட்புப் பணிகள்  தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தராப்பூர் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.)அமைந்துள்ள பகுதியில் உள்ள
மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை தீ: மீட்புப் பணிகள்  தீவிரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தராப்பூர் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.)அமைந்துள்ள பகுதியில் உள்ள ரசயான தொழிற்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பால்கர் மாவட்டம் தராப்பூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென தீ பிடித்தது. தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்த பால்கர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நர்னாரே செய்தியாளர்களிடம் கூறுகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. 

தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையைச் சார்ந்த எந்திரங்கள் மற்றும் சுகாதாரத் துறை எந்திரங்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டும் வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அனைவரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஓரளவிற்கு தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறினார். 

தீ விபத்தில் அருகில் உள்ள 2 தொழிற்சாலைகள் தீப்பிடித்துள்ளதாகவும், பல தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் தீ விபத்தில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com