துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 
துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. 
இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. 

பத்திரிகையாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரண்டு பேர் சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக டோக்கன் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வேலையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென், குழுவுக்கு நெருக்கமான ஊடகங்களுக்கு வேலை செய்பவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர்.

இஸ்தான்புல் நீதிமன்றத்தில் இன்று தண்டனை வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்ட 25 பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com