இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள பணக்கார கட்சி எது தெரியுமா..?

இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.635 கோடி
இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள பணக்கார கட்சி எது தெரியுமா..?

புதுதில்லி: இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.635 கோடி சொத்து மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சி ரூ.224.87 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது பணக்கார  கட்சியாக உள்ளது.   

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில கட்சிகள் தங்கள் சொத்துக் கணக்கு, வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறையிடம் சமர்பிக்க வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையத்திடமும் அளிக்க வேண்டும். 

இந்நிலையில், நாட்டின் 22க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள், 2011-12 மற்றும் 2015-16-ஆம் நிதியாண்டில், தங்களது சொத்து விவரங்கள், வங்கி முதலீடுகள், இதர வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் வாயிலாக கிடைத்தவைகளை தேர்தல் ஆணையத்திடமும், வருமான வரி்த்துறையிடமும் சமர்பித்தது. அதன் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி நாட்டில் பணக்கார கட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 2011-12 வரையிலான நிதியாண்டில் பெரும்பாலான மாநில கட்சிகள், தங்களது அதிகப்படியான சொத்து வருமானமாக டெபாசிட் தொகைகளை காண்பித்துள்ளனர். இக்கட்சிகளுக்கு சுமார் ரூ.331.54 கோடி (68.77 சதவீதம்) சதவீதம் டெபாசிட்டுகள் வழியாக வந்துள்ளது. இதே டெபாசிட் தொகை 2015-16- நிதியாண்டில் ரூ.1054.80 கோடிக்கு உயர்ந்துள்ளது. 2011-12 நிதியாண்டில் 20 மாநில கட்சிகள் அறிவித்த சொத்துக்களின் சராசரி மதிப்பு ரூ.24.11 கோடி. இது 2015-16-இல் ரூ.65.77 கோடிக்கு உயர்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு, 2011-12 நிதியாண்டில் ரூ.212.86 கோடியாக இருந்தது. 2015-16 நிதியாண்டில் 198 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.634.96 கோடி அதிகரித்து, நாட்டின் முதல் பணக்கார கட்சியானது. இரண்டாவது இடத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக இடம்பெற்றுள்ளது. 2011-12 நிதியாண்டில் ரூ.88.21 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் அதிமுகவின் சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரித்து 2015-16 நிதியாண்டில் ரூ.224.87 கோடியாக அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. அதிமுக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த சொத்துவிவரமாகும். 

அதிமுக, சமாஜ்வாதி கட்சி, அனைத்திந்திய பார்வேர்ட் பிளாக், சிவசேனா ஆகிய மாநில கட்சிகளின் சொத்து மதிப்புதான், தொடர்ந்து வளர்ந்து வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் சொத்து மதிப்பு ரூ.20.59 கோடியில் இருந்து 92 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.39.568 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. 

2011- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்யப்பட்டது. 2012-13 நிதியாண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரல் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளால் வெளியிடப்பட்ட சராசரி சொத்து மதிப்பு ரூ.1.165 கோடி ஆகும். இவ்விரு கட்சிகளின் 2015-16 நிதியாண்டின் சொத்து மதிப்பு ரூ.3.765 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாநில கட்சிகள் வாங்கியுள்ள கடன் விவரங்கள் குறித்த தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 

20 மாநில கட்சிகளால் அறிவிக்கப்பட்ட மொத்த கடன்கள் 47.475 கோடி ரூபாய் ஆகும். இது 5 நிதி ஆண்டுகளில் 52.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2011-12 நிதியாண்டில் சிவசேனா கட்சி தங்களுக்கு ரூ.16.594 கோடி கடன் இருந்ததாக குறிப்பிட்டது. திமுக தங்களுக்கு ரூ.9.214 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. தெலுங்கானா ராஷ்டிர சமித்தி கட்சி 2015-16 நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.15.97 கோடி கடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 2013-14க்கு நடுவே சிவசேனா கடன் 99.78 சதவீதம் குறைந்தது. ஆனால்,தெலுங்கானா ராஷ்டிர சமித்தி கட்சி கடன் அளவு 259 சதவீதம் அதிகரித்திருந்தது.

2012-13 நிதியாண்டில் ஒய்எஸ்ஆர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மொத்த கடன்கள் ரூ.1.86 கோடி (சராசரியாக ரூ.93 லட்சம்) மற்றும் 2015-16 நிதியாண்டில் 5.03 கோடி ரூபாய் (சராசரியாக 2.515 கோடி ரூபாய்) கட்சி).

2011-12 நிதியாண்டில் கடன் இல்லை என அறிவித்த டிஆர்எஸ்சி கட்சி, 2015-16 நிதியாண்டில் ரூ.15.97 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளது. 

2011-12 நிதியாண்டில் மாநிலக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட மொத்த மூலதனம் அல்லது இருப்பு நிதி ரூ. 434.635 கோடி. இது 2015-16 நிதியாண்டில் ரூ.823.535 கோடி (189.48 சதவீதம்) அதிகரித்துள்ளது.

2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளுக்கு இடையே மாநில கட்சிகள் அறிவித்த மூலதனம் 14.66 சதவீதம் அல்லது ரூ.160.90 கோடியாக அதிகரித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் மொத்தமுள்ள 634.913 கோடி ரூபாய்களும், திமுக ரூ.257.18 கோடியும், அதிமுகவில் ரூ.224.84 கோடி ரூபாயும் உள்ளது.

2011-12 நிதியாண்டில் மொத்த மூலதன நிதி ரூ.11.538 கோடியாக அறிவித்திருந்தது. இது 2015-16 நிதியாண்டில் ரூ.46.09 கோடியாக அதிகரித்துள்ளது. இது ரூ. 34.552 கோடி அல்லது 299 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com