நஷ்டத்தில் இயங்கும் முதல் 10 பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலில் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி. மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2016-2017ம் ஆண்டுகளில் அதிக லாபம் ஈட்டியது.  
நஷ்டத்தில் இயங்கும் முதல் 10 பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலில் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி. மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2016-2017ம் ஆண்டுகளில் அதிக லாபம் ஈட்டியது.  

அதே நேரத்தில் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை மிக அதிக இழப்புக்களை சந்தித்தன என்று நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க ஆய்வு ஒன்று  தெரிவிக்கிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த இந்த ஆய்வின் படி பிஎஸ்என்எல், ஏர் இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை 2016-17ல் 55.66% இழப்புகளை சந்தித்து முதல் பத்து இடத்தில் உள்ளது. 

எனினும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஓ.என்.ஜி.சி மற்றும் கோல் இந்தியா லிமிடெட் ஆகியவை முறையே 19.69%, 18.45% மற்றும் 14.94% லாபங்கள் ஈட்டி முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளது. 

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் மங்களூர் ரிஃபீரியல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களின் வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வந்தது. அதேநேரத்தில்  இந்துஸ்தான் ஃபர்டிலிஸ் கார்ப்பரேஷன் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் இந்த வரியில் இருந்து வெளியேறின.  

2015-16 ஆம் ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் கேபிள்கள், பிஹெச்இஎல் மற்றும் ஓஎன்ஜிசி வித்ஷ் லிமிடெட் நஷ்டத்தில் இயங்கியது. எனினும்  2016-17 ஆம் ஆண்டில் இவை லாபம் ஈட்டியது, அதேபோல் மேற்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட், எஸ்டிசிஎல், ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் மற்றும் பிரம்மபுத்ரா கிரகர்ஸ் மற்றும் பாலிமர் லிமிட்டட் ஆகியவையும்  நஷ்டத்தில் இயங்கும் முதல் பத்து நிறுவங்களின் வரிசையில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com