இந்தியாவில் வரும் 2025- ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்: பிரதமர் நரேந்திர மோடி

மத்திய சுகாதார துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய காசநோய் ஒழிப்பு மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்தது.
இந்தியாவில் வரும் 2025- ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்: பிரதமர் நரேந்திர மோடி

மத்திய சுகாதார துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய காசநோய் ஒழிப்பு மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டை துவங்கி வைத்தார். உலக தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி 

இந்தியாவில் வரும் 2025- ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்க வேண்டும் என்பதே தேசியளவிலான குறிக்கோள் என்றார். மேலும் உலகளவில் காசநோயை 2030ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 5 வருடங்கள் முன்பாகவே இந்தியாவில் காசநோய் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காசநோய்க்கு எதிராக பல திட்டங்கள் வகுத்தும் இதுவரை நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நிலைமையை மேலும் தீவிரமாக ஆராய்ந்து புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

இந்த தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே இந்த திட்டத்தில் சேரும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  நான் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் பெரும் பங்காற்ற வேண்டியது அவசியம்.

உலகளாவிய இறப்பின் முதல் பத்து காரணங்களில் ஒன்று. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.8 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறனர்.  அவர்களில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் இறக்க நேரிடுகிறது. 2016ம் ஆண்டில் 1.7 மில்லியன் பேர் காச நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். காச நோயை தடுப்பதில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட மாற்றங்கள் ஏற்படவில்லையென்றால், நம் அணுகுமுறையை மாற்ற வேண்டும்.  

காசநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. எனவே காசநோய் ஒழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவ வேண்டும் என மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com