74 மாதங்களில் 1,212 போலி கடன் உத்தரவாத பத்திரங்கள் பெற்றுள்ளார் நீரவ் மோடி: அருண் ஜேட்லி தகவல் 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் உத்தரவாத கடிதங்களை கொண்டே வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி கடன் பெற்றார்.
74 மாதங்களில் 1,212 போலி கடன் உத்தரவாத பத்திரங்கள் பெற்றுள்ளார் நீரவ் மோடி: அருண் ஜேட்லி தகவல் 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் உத்தரவாத கடிதங்களை கொண்டே வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி கடன் பெற்றார். அவர் தனது முதல் போலி கடன் உத்தரவாத பத்திரத்தை மார்ச் 2011ம் ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளையில் பெற்றுள்ளார். தொடர்ந்து அடுத்த 74 மாதங்களில் 1,212 கடன உத்தரவாத பத்திரங்களை அவர் பெற்றுள்ளார் என அருண் ஜேட்லி கூறியுள்ளார். 

நீரவ் மோடியின் அனைத்து நிறுவனங்ளிலும்  இந்த பரிந்துரைக் கடிதம் பெறப்பட்டு  ஒரே நாளில் 5 உத்திரவாத பத்திரம் வெளிநாட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் பணமாக கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் சில ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். 
என்று மாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்தின் போது எழுத்துப் பூர்வமாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: -

கடந்த 2017ம் ஆண்டு மே 23- ம் தேதி நீரவ் மோடி தனது கடைசி போலி கடன் உத்தரவாத பத்திரத்தை கொடுத்துள்ளார்.  இந்த ஆறு ஆண்டுகளில் 53 உண்மையான கடன் உத்திரவாத பத்திரங்களையும் அவர் சமர்பித்துள்ளார். 

கடன் உத்திரவாதப் பத்திர ஓராண்டு செல்லுபடியாகும் தன்மையுடயது. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொடுத்த போலிப் பத்திரத்திற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணம் பெற்றுள்ளார். தேதிவாரியாக கடன் பத்திரம் கொடுத்துள்ளதாக ஜேட்லி தெரிவித்தார். 

நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெஹுல் சக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கோடி ஏமாற்றியுள்ளனர்.  மெஹுல் சக்ஸி யின் நிறுவனமான கீதாஞ்சலி குழுமம் பெயரில்  ரூ. 7,080.86 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. மற்றவை நீரவ் மோடி செய்த மோசடியாகும். இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி பிப்ரவரி 6ம் தேதி நிதித்துறைக்கு தகவல் தெரிவித்தது என்று ஜேட்லி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com