அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த் 

ஆன்மீக பயணமாக இமயமலை வட இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம்
அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த் 

டேராடூன்:  ஆன்மீக பயணமாக இமயமலை வட இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார். 

மேலும் நான் இங்கு ஆன்மிக பயணம் வந்துள்ளேன். அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை, நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல, என் கட்சி பெயர் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக ரஜினிகாந்த் ரிஷிகேஷ் சென்றார். குகையில் தரிசனம் செய்தார். குதிரையில் பயணம் செய்தார். ஆன்மிக குருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். இமய மலையில் இருந்து ரஜினி திரும்பி வந்த பிறகு தனது கட்சி பெயரை அறிவித்து தீவிர சுற்றுப்பயணம் செய்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com