கரைதிரும்பாத மீனவர்களை தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது: பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் 

தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை தொடர்புகொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக
கரைதிரும்பாத மீனவர்களை தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது: பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் 

தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை தொடர்புகொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

குமரிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா, தென் கேரள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதனிடையே தகவல் தெரியாமல் கன்னியாகுமரியில் இருந்து நீண்ட நாள் மீன்பிடிப்பிற்காக 652 படகுகளில் சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. 

இதையடுத்து, அறிவிப்புக்கு முன்னதாகவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 604 படகுகள் திரும்பி விட்டதாக தெரிவித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் சத்யகோபால், அந்த படகுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருக்க வாய்ப்புள்ளதால், அவர்களை தொடர்பு கொண்டு, கரைக்கு வரவழைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

அரபிக் கடலில் 156 படகுகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இருப்பதாகவும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால், நடுக்கடலில் உள்ள மீனவர்களை மீட்க கடலோரக் காவல்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருவாய், பேரிடர் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். 

மேலும் கேரள கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் 3 நாட்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சத்யகோபால் கேட்டுக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com