2018-2019ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.  2018 மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாளை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
2018-2019ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாளை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து உரையாற்றுகிறார். இதற்காக பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்று விவாதிக்க நாளை நண்பகலில் பேரவையின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றைத் தமிழகம் எதிர்கொள்ளவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசால் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, தமிழகத்தின் வரி வருவாய்களில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களுக்குச் செல்கின்றன. இந்த நிலையில், ஏழாவது ஊதியக் குழு நடைமுறையால், அரசுக்கு மேலும் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தால் தமிழகத்துக்கு வரவேண்டிய வரி வருவாய்களும் குறைந்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால், நிதிநிலை அறிக்கையில் அதிகளவு வருவாய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட புதிய வரிகள் அல்லது வரிகள் உயர்வு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com