நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்விற்கான முன்னேற்பாடு பணிகளை கல்வித் துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இவற்றில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 4,81,371 பேர் மாணவிகள், 4,83,120 பேர் மாணவர்கள். அதே போல், தனித்தேர்வர்களாக 11,098 பெண்கள், 25,546 ஆண்கள், 5 திருநங்கைகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26,043 மாணவிகள் மற்றும் 24,713 மாணவர்கள் என 50,756 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மாணவிகள் 8,694 பேர், மாணவர்கள் 8,820 பேர் என மொத்தம் 17,514 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com