அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகே பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக 
அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகே பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

மியாமி: அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது.

இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக ஒரு சிறிய நடை மேடை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை அந்த நடை மேடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில், அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 8 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 8 வாகனங்களின் உள்ளே இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் இடிந்ததையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மியாமி நகர நகர தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி டேவ் டவுனி தெரிவித்துள்ளார். 

நடை மேடை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com