பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது ஸ்பைஸ்ஜெட் விமானம்!

பெங்களூரு விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது ஸ்பைஸ்ஜெட் விமானம்!

பெங்களூரு விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்தில் சிக்கியதாவும், அனைவரும் அதிரிஷ்டவசமாக எந்தவித சேதாரமும் இல்லாமல் உயிர்தப்பினர் என தகவல் வெளியாகி உள்ளது.  

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த தனியார் ஸ்பைஸ்ஜெட் SG 1238 விமானம் தரையிறங்கியது. பின்னர் ஓடுபாதையில் செல்லும் போது நான்கு ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதனால் 40 நிமிடங்கள் ஓடுபாதை செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த ஓடு பாதை மூடப்பட்டதால், இந்த விமான நிலையத்திற்கு வரும் சுமார் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் சென்னைக்கு எட்டு விமானங்களும், திருச்சி மற்றும் கோவைக்கு தலா ஒரு விமானமும் திருப்பி விடப்பட்டது.

மேலும் இந்த விபத்தினால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயம் மற்றும் சேதம் ஏற்படவில்லை என ஸ்பைஸ்ஜெட் விமான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com