ரஷ்ய அதிபர் தேர்தல்: 4-வது முறையாக அதிபராகிறார் விளாடிமிர் புதின்!

ஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விளாடிமிர், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதின் வெற்றி பெற்றுள்ளதை
ரஷ்ய அதிபர் தேர்தல்: 4-வது முறையாக அதிபராகிறார் விளாடிமிர் புதின்!

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விளாடிமிர், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதின் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ரஷ்ய அதிபராக 4-வது முறையாக பதிவியேற்கிறார் விளாடிமிர் புதின். 

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 11 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 96,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 109 நாடுகளைச் சேர்ந்த 1,500 பார்வையாளர்கள் வாக்குப்பதிவை கண்காணித்தனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சுயேட்டை வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபராக உள்ள புதின் 76.56 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதாவது புதின் தற்போது வரையில் 5 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 184 வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்ற 80 லட்சத்து 50 ஆயிரத்து 978 வாக்குகளை விட 4 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 206 வாக்குகள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பவெல் குரூடின் 12 சதவீத வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். 

வெற்றிக்கு 50 சதவீத வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 76.56 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ள புதின், மாஸ்கோவில் தனது ஆதரவாளர்களு நன்றி தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவின் முன்னேற்றத்திற்காக தாம் செய்த பணிகளுக்கு கிடைத்த பரிசு என்றார்.

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக விளாடிமிர் புதின், ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் குருடினின், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் விளாடிமிர் சிரினோவ்ஸ்கி உட்பட 8 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புதின், கடந்த 1999-இல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார். 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2012-இல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அதிபரானார். தற்போது 4-வது முறையாக அதிபராகும் புதின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிப்பார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com