யங் இந்தியன் கம்பெனி சார்பில் ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய சோனியா, ராகுலுக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கான வருமான வரியாக, 
யங் இந்தியன் கம்பெனி சார்பில் ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய சோனியா, ராகுலுக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கான வருமான வரியாக, 249 கோடி ரூபாய் செலுத்தும்படி, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

யங் இண்டியன் பிரைவேட் லிமிட் என்ற சாரிட்டபிள் டிரஸ்ட் வருமான வரியாக 2011-2012ம் ஆண்டில் ரூ.249.15 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரி இலாகா யங் இண்டியா நிறுவனத்தின் முக்கிய உரிமையாளர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த, 2011 - 12 நிதியாண்டுக்கு, வருமான வரியாக, 249.15 கோடி ரூபாயை செலுத்தும் படி, யங் இந்தியன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. அதில் நடவடிக்கை எடுப்பதற்கு தடை கோரி, யங் இந்தியன் நிறுவனம் சார்பில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதை விசாரித்த நீதிமன்றம், 'முதல் கட்டமாக, 10 கோடி ரூபாயை, வருமான வரித் துறையிடம் செலுத்த வேண்டும். 'அதில், ஐந்து கோடி ரூபாயை, இம்மாத இறுதிக்குள்ளும், மீதமுள்ள, ஐந்து கோடி ரூபாயை, ஏப்., 15க்குள்ளும் செலுத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை, ஏப்., 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com