முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூரில் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பெண்கள் பிரிவு உறுப்பினர்கள் முத்தலாக்
முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூரில் ஆர்ப்பாட்டம்

நாக்பூர்: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பெண்கள் பிரிவு உறுப்பினர்கள் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோலவே, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பெண் உறுப்பினர் அஸ்மா ஸிகரா கூறுகையில் ‘‘முத்தலாக் சட்டம், முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. முத்தலாக் சொல்லும் கணவனை சிறையில் அடைத்தால், முஸ்லிம் பெண் மற்றும் அவரது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்’’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நாக்பூரில் இன்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பெண்கள் பிரிவு உறுப்பினர்கள் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாக்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com