ரத யாத்திரை தொடர்பாக விவாதிக்க திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் மனு

தமிழகத்தில் ரத யாத்திரை மற்றும் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, நாளை நேரம் ஒதுக்கக்கோரி
ரத யாத்திரை தொடர்பாக விவாதிக்க திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் மனு

தமிழகத்தில் ரத யாத்திரை மற்றும் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, நாளை நேரம் ஒதுக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் மனு தாக்கல் செய்துள்ளார். 

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ய ரத யாத்திரை உ.பி.,யில் பிப்., 13ம் தேதி துவங்கியது. உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் என ஆறு மாநிலங்களில் இந்த யாத்திரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. கடைசியாக ராமேஸ்வரத்தில் யாத்திரை முடிய வேண்டும். 

இந்த யாத்திரைக்கு மற்ற ஐந்து மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. குறிப்பாக, காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகா மற்றும் இடதுசாரி ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்த யாத்திரைக்கு, அந்த மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கவில்லை. நேற்று (மார்ச் 19) இரவு, கேரளா புனலுாரில் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, நெல்லை மாவட்டம், கோட்டைவாசலுக்கு வந்த ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக, இன்று மதியம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சென்று, இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. ரத யாத்திரை வரும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரத யாத்திரைக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பாளர்களை கைது செய்யும் வகையில், நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறுவதற்காக, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று ஒரே நாளில் 69 போராட்டங்கள் நடத்தப்பட்டன 3,314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் ரத யாத்திரை மற்றும் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, நாளை நேரம் ஒதுக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com