புதிய மணல் குவாரிகள் திறக்க நாளை டெண்டர் கோரப்படும்: முதல்வர் பழனிசாமி

மணல் குவாரிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
புதிய மணல் குவாரிகள் திறக்க நாளை டெண்டர் கோரப்படும்: முதல்வர் பழனிசாமி

மணல் குவாரிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குவாரிகள் திறக்க நாளை டெண்டர் கோரப்பட உள்ளது என்றார்.

தமிழக சட்டசப் பேரவையில் இதுதொடர்பாக அவர் இன்று கூறியதாவது:

பொது நல வழக்குகள் போடப்பட்டதால் நீதிமன்றம் மணல் குவாரிகளுக்கு தடை விதித்தது. தற்போது தடை நீங்கி மணல் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மணல் குவாரிகளுக்கான டெண்டர் நாளை கோரப்பட உள்ளது; குவாரிகளை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மணல் குவாரிகளுக்கான டெண்டர் நாளை கோரப்பட உள்ளது; புதிய மணல் குவாரிகள் திறந்து தட்டுப்பாடு இல்லாமல் மணல் விற்பனை செய்யப்படும். வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்து ஆன்லைனில் அரசே விற்கும் .

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் கலப்படம் செய்யப்பட்ட மணலா என்றெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com