2020-ல் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கும்: அமைச்சர் ஸ்மிருதி இராணி 

020-ல் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 
2020-ல் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கும்: அமைச்சர் ஸ்மிருதி இராணி 

020-ல் இந்தியா பட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: - அடுத்த மூன்று ஆண்டுகளில் பட்டு உற்பத்தியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை ஒருகோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 

50 ஆயிரம் பேர் பயிற்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இத்துறையின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக  ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தொடர்புடைய அமைச்சகங்களின் ஒரு மத்திய அமைச்சர் குழு அமைக்கப்படும். 

2020 ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள உள்ள பட்டு வளர்ப்பு துறை "பட்டு தொழில் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டத்திர்கு மத்திய அமைச்சரவை 2,161.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

சந்தை மேம்பாடு மிகவும் முக்கியமான பகுதி என்றும் நாட்டின் முக்கிய பட்டு உற்பத்திக்கான மாநிலங்களில் 21 பட்டுப்பூச்சி  சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தவிர, 19 அடிப்படை பட்டு விதை பண்ணைகளும், 20 பட்டு புழு விதை உற்பத்தி மையங்கள், 131 சர்க்கரை வளர்ப்பு மையங்களும், 500 ஏக்கர் நிலமும் மேம்படுத்தப்பட்ட வகைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com