நிறுத்தப்பட்ட ராமராஜ்ய ரத யாத்திரை புறப்பட்டது

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
நிறுத்தப்பட்ட ராமராஜ்ய ரத யாத்திரை புறப்பட்டது

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய இந்த யாத்திரை மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களைக் கடந்து, தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு செவ்வாய்கிழமை வந்தடைந்தது. ஆங்காங்கே, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரத யாத்திரை பயணம் தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு ராம ராஜ்ய ரதம், ராமேசுவரம் வந்தடைந்தது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள், ஆன்மிக பெரியோர்கள் உற்சாகத்துடன் ரதத்தை வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். பிறகு இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஈசிஆர் வழியாக செல்லாமல் தேவிப்பட்டிணம் வழியாக செல்ல முயன்ற ரத யாத்திரை போலீஸாரால் தடுக்கப்பட்டது. பிறகு அறிவுறுத்தி பாதையில் செல்ல ஒப்புக் கொண்டதை அடுத்து, தடுத்து நிறுத்தப்பட்ட ரத யாத்திரை மீண்டும் புறப்பட்டு சென்றது. அதேபோல நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com