வியட்நாமில் சோகம்: அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 13 பேர் பலி

வியட்நாமின் ஹோசிமின் நகரில் உள்ள கன்டோமினியம் வளாகத்தில் உள்ள 20-அடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் பரிதாபமாக
வியட்நாமில் சோகம்: அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 13 பேர் பலி

ஹனாய்: வியட்நாமின் ஹோசிமின் நகரில் உள்ள கன்டோமினியம் வளாகத்தில் உள்ள 20-அடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வியட்நாம் ஹோசிமின் நகரில் உள்ள கன்டோமினியம் வளாகத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கரினா பிளாசாவின் 20-அடுக்கு கட்டடத்தில் 700க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டினுள் உரக்கத்தில் இருந்தவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளியில் வந்து பார்த்தவர்கள் கட்டடம் தீ விபத்தியில் சிக்கி உள்ளது குறித்து உதவி கேட்டு குச்சலிட்டனர்.

இதையடுத்து தூக்கத்தில் இருந்தவர்கள் பதற்றத்துடன் எழுந்து வெளியே வந்தவர்கள் மாடி படிகள், லிப்ட் வழியாக தப்பித்து வந்தனர். பலர் தப்பிக்க முடியாமல் கூச்சலிட்டனர். 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடினர். உடனடியாக மீட்பு குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் சிக்கிய 13 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும், 28க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் மூன்று மற்றும் ஐந்து வயது சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 19வது மாடியில் இருந்து ஒரு பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரு மணி நேரமாக தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தீயில் சிக்கிய நூற்றுக்கணக்கானவர்கள் அடுத்த 4 மணிநேரத்திற்கு பின்னர் மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

சிலர் தீயணைப்பு வாகனத்தின் டிரக் லிப்ட் வழியாகவும், பலர் மாடிப்படிகள் மூலம் கீழே கொண்டுவரப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் பலரும் தங்களின் குடும்ப சொந்தங்களை தேடி தவித்தனர்.

தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com