ஓராண்டு சாதனை என்ற பெயரில் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டிள்ளதாக தமிழக
ஓராண்டு சாதனை என்ற பெயரில் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டிள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகள் என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டிள்ளதாக என்று கடுமையாக விமச்சித்தார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் போனதற்கு திமுகதான் காரணம் என அதிமுகவினர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 

ஈரோட்டில் வரும் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள திமுக மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல், மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் தமிழக அரசு, 29-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொல்கிறார் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com