உ.பி.மாநிலங்களவை தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் பாஜக வென்றுள்ளது: பகுஜன்சமாஜ் சாடல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிகாரம் மற்றும் பண பலத்தால் பாஜக வென்றுள்ளது என
உ.பி.மாநிலங்களவை தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் பாஜக வென்றுள்ளது: பகுஜன்சமாஜ் சாடல்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிகாரம் மற்றும் பண பலத்தால் பாஜக வென்றுள்ளது என பகுஜன்சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

உத்தரப் பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் 26 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட 12 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட அக்கட்சியின் 4 வேட்பாளர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது.  

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் பா.ஜ.க. சார்பில் அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் உள்பட 9 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி சார்பில் ஜெயா பச்சன் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எம்எல்ஏ பலத்தின் அடிப்படையில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற முடியும் என்றபோதும் கூடுதலாக ஒரு வேட்பாளரையும் அக்கட்சி நிறுத்தியிருந்தது. சமாஜவாதி வேட்பாளராக ஜெயா பச்சன் போட்டியிட்டார்.

இந்நிலையில், அருண் ஜேட்லி உள்பட பாஜகவின் 9 வேட்பாளர்களும், சமாஜவாதி கட்சியின் ஜெயா பச்சனும் வெற்றி பெற்றனர்.

சமாஜவாதியின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது. எனினும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜக கூடுதலாக நிறுத்திய வேட்பாளர் அனில் குமார் அகர்வால், 2-ஆவது முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டு சேர்ந்து, பாஜகவை தோற்கடித்தன. ஆனால், இரு கட்சிகளின் எம்எம்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் கனவு பலிக்காமல் போய்விட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக முறைதவறி வென்றுள்ளது என பகுஜன்சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியினர் கூறுகையில், ஆளும் பாஜகவினர் தனது ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் அனைத்தும் பயன்படுத்தி இந்த தேர்தலில் வென்றுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர். 

முன்னதாக, 17 மாநிலங்களில் உள்ள 59 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 10 மாநிலங்களில் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com