உ.பி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 பேர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 10 பேரை உத்திரப்பிரதேச
உ.பி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 பேர் கைது

லக்னோ: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 10 பேரை உத்திரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு ஐஜி ஆசிம் அருண் கூறுகையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் கோரக்பூர், லக்னோ, பிரதாப்கார்க் மற்றும் ரிவான் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்த வந்த உத்தரவின்படி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்ப்டடு வருகிறது. 

பயங்கரவாத அமைப்பினரின் உத்தரவுப்படி, உத்திரப்பிரேசம், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பல வங்கிகளில் போலியான பெயர் மற்றும் அடையாள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கை துவக்கி, பணத்தை பயங்கரவாதி அமைப்புகளுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த போலி வங்கி கணக்கிற்கு நேபாளம், பாகிஸ்தான், மற்றும் கத்தாரில் இருந்து பணம் போடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது எனத் தெரிவித்தார். 

மேலும், சட்ட விரோதமான பணப்பரிமாற்றத்தை பாகிஸ்தானில் இருந்து ஒருவர் கண்காணித்துள்ளார். இதுகுறித்து வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏடிஎம் கார்டுகள், ரூ.42 லட்சம், லேப்டாப்கள் மற்றும் வங்கிகளின் கணக்கு புத்தகங்கள், நாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com