லாலு குடும்பத்தினருடன் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு

பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன்களை
லாலு குடும்பத்தினருடன் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு

 பாட்னா: பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன்களை சந்தித்துப் பேசினார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை ஜார்க்கண்ட் மருத்துவமனையில் பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருஹன் சின்ஹா சனிக்கிழமை சந்தித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஞ்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகார் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

 இத்தகைய சூழலில், அவரை சத்ருஹன் சின்ஹா சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது அரசியல் சூழல் தொடர்பாக இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இதுகுறித்து டுவிட்டரில் சத்ருஹன் சின்ஹா வெளியிட்ட பதிவில், மண்ணின் மைந்தரும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவருமான லாலுவை சந்தித்துப் பேசினேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் அவர் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன் என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு நேற்று பாஜக. எம்.பி சத்ருகன் சின்ஹா சென்றார். அங்கு அவர் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கால்நடை ஊழல் தொடர்பான 4-வது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரை பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா சந்தித்தது அரசியல் கட்சி பிரமுகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com