தெலங்கானாவில் கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் விவசாய கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதில் 6
தெலங்கானாவில் கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் விவசாய கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதில் 6 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் முக்பல் பகுதியில் இருந்து மென்டோரா என்ற இடத்தை நோக்கி சுமார் 14 பேருடன் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ ரிக்‌ஷா குறுகலான வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உள்பட 7 பேர் கிணற்று படிகள் வழியாக தப்பித்துள்ளனர். மீதமுள்ள உடல்களை கண்டுபிடிப்பதற்காக கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  மற்

மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்பல் கிராமத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்ட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் வேம்பள்ளி, முக்பல் மற்றும் மென்டோரா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் தொழிலுக்கு  புதியவர் என்றும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. 

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள ஆட்சியர் எம். ராம்மோகன் ராவ் மற்றும் காவல்துறை ஆணையர் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தெலகானா முதல்வர் சந்திரசேகர ராவ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com