ஆம்புலன்சிலேயே சிறுநீர் கழித்ததால் விபத்தில் சிக்கியவரை கீழே தள்ளிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது

ஆம்புலன்சிலேயே சிறுநீர் கழித்ததால் விபத்தில் சிக்கியவரை கீழே தள்ளிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது

திரிச்சூர்: கேரளா மாநிலம், பாலக்காட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவர் ஆம்புலன்சிலேயே சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறி அதன் ஓட்டுநர் ஸ்ட்ரெட்சரோடு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20-ஆம் தேதி கேரளா மாநிலம், திகதி பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் திரிச்சூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடன் வந்த மருத்துவ உதவியாளர்கள் கிளவுஸ் எடுக்கச் சென்றிருந்தனர். அப்போது, படுகாயமடைந்தவர் ஆம்புலன்ஸிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் ஆத்திரத்தில் அவரை ஸ்ட்ரெட்சரோடு இழுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார். ஸ்ட்ரெட்சரின் ஒரு பகுதி ஆம்புலன்சிலும், மறுபகுதியுடன் அவரது தலைப் பகுதி தரையுடனும் கிடந்துள்ளது.

மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் வீடியோ எடுக்கப்படுவதை அறிந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை தூக்கி வீல் சேரில் அமரவைத்தனர். 

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட போதும் அந்த விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் ஏற்றி வந்து தள்ளிவிடப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். 

அம்புலன்சில் இருந்து தள்ளிவிடப்பட்டு தலைகீழாக கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், நோயாளியின் உடலை ஆம்புலன்சில் தூக்கி எறிந்துவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com