குருகோபிந்த்சிங்கின் 350வது பிறந்ததினம்: ரூ.350 நாணயத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம்
குருகோபிந்த்சிங்கின் 350வது பிறந்ததினம்: ரூ.350 நாணயத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

புதுதில்லி: சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் அரிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

44 மி.மீட்டர் விட்டமும், 35 கிராம் எடையும் கொண்ட அந்த நாணயம் அசோக சக்கரம் சத்யமேவ ஜெயதே வாசகத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறத்தில் பாட்னாவில் குருகோபிந்த் சிங்கின் புகழை பரப்பும் தக்த் ஸ்ரீஹர்மிந்தர் பாட்னா சாகிப் குருதுவாராவின் தோற்றம் பதிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் சேர்க்கப்பட்டுள்ளது.. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நாணயங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com