ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப்பின் முடிவு பெரும் தவறு: ஒபாமா எச்சரிப்பு

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள முடிவு பெரும் தவறு என்று அந்நாட்டின் முன்னாள்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப்பின் முடிவு பெரும் தவறு: ஒபாமா எச்சரிப்பு

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள முடிவு பெரும் தவறு என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.  

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது, வியன்னாவில் ஈரானுடன் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய 5 வல்லரசு நாடுகளும், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின்போது, அந்த ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தவர், அதிபராக பதவியேற்றதிலிருந்தே ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

இந்த நிலையில் தற்போது, 'ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நம்மால் தடுக்க முடியாது. அந்த ஒப்பந்தத்தில் குறைகள் உள்ளது. ஆதலால், அதில் இருந்து அமெரிக்கா விலகுகிறது' என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பது தொடர்பான உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் டிரம்ப் எச்சரித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 'மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் அழிவுக்கான போர் அல்லது அணு ஆயுதப் பரவலைவிட அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வேறு பல விஷயங்கள் முக்கியமானதாக உள்ளன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவு அமெரிக்காவின் மீதான உலக நம்பகத்தன்மையை அழிக்கும் ஒரு "பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். 

வடகொரியா வருகைக்காக, இதுவொரு ராஜதந்திரத்திற்கான முன்மாதிரி என்று ஒபாமா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com