பயங்கரவாதத்தின் தந்தை திலகரா..?: 8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை கருத்து

பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கெஞ்சுவதன் மூலம் எங்களால் எதையும் சாதிக்க முடியாது
பயங்கரவாதத்தின் தந்தை திலகரா..?: 8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை கருத்து

அஜ்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் பால கங்காதர திலகர் பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ள தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமானவராக பால கங்காதர திலகர் திகழ்கிறார். 

இந்நிலையில் ராஜஸ்தான் மேல்நிலை கல்வி எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிக்கல்வி பாடபுத்தகத்தில், "திலகர், தேசிய இயக்கத்திற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்" என புத்தகத்தின் 22 பாடத்தில், 267வது பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இது திலகர் விபரம் என்ற பிரிவில் ’18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் போது தேசிய இயக்கத்தின் சம்பவங்கள்’ என்ற துணை தலைப்பின் ஒரு பகுதியாக அச்சிடப்பட்டுள்ளது. 

பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கெஞ்சுவதன் மூலம் எங்களால் எதையும் சாதிக்க முடியாது என்று திலகர் கூறினார். சிவாஜி, கணபதி திருவிழாக்கள் மூலம் திலகம் நாட்டு மக்கள் மத்தியில் தேசியவாதத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அவர் மக்களிடையே சுதந்திரம் எனும் மந்திரத்தை ஊக்குவித்தார். இதன் காரணமாக அவர் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் ஒரு முள்ளாக தோன்றினார். அதனால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்பட்டார் என்று அந்த புத்தகத்தில் மேலும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் ராஜஸ்தான் மொழியில் இருந்து ஆங்கிலத்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரைவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டூடன்ட் அட்வையர் பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுள்ளது. 

திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குநர் கைலாஷ் சர்மா கூறுகையில், திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்றாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும் என்றார்.

இந்நிலையில், ‘திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பாட புத்தகங்களில் இடம்பெறும் வாசகங்களை எழுதுவதற்கோ அல்லது தயார் செய்வதற்கு முன்போ இத்தகைய சர்ச்சைக்குரிய வாசகங்களை மாற்ற வேண்டும். வரலாற்று ஆய்வாளர்களிடம் முதலில் கலந்து ஆலோசித்த பிறகு பள்ளி புத்தகங்களை அச்சிட வேண்டும்’ என்று  திலகர் பற்றிய இந்த சர்ச்சை வாசகம் தொடர்பாக தனியார் பள்ளி கழக இயக்குநர் கைலாஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com