8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு

8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்
8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு

8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -

கன்னியாகுமரி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் ஏ.எஸ்.பியாக இருந்த என்.எஸ்.நிஷாவுக்கு திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குளச்சல் ஏ.எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்விக்கு சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பிரவேஸ் குமார் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ஷியாமளா தேவி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சோஷந்த் சாய் அடையாறு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் ரோகித் நாதன் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன் அம்பத்தூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஸ் ராஜ் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆனி விஜயா, போதைப்பொருள் புலனாய்வுத்துறை எஸ்.பி-யாக இடமாற்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com