பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புவனேஸ்வர்: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் தினமும் மாறி வரும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து நிற்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் பொதுமக்கள், வர்த்தக பிரிவினர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட இன்னும் சில ரூபாய்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி நாடுகளில் உற்பத்தி குறைவாலும், ஈரான் அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வெளியேறியதில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிலைமைகளைச் சமாளிக்க மத்திய அரசு விரைவில் ஒரு தீர்வை காணும் என உறுதியளித்தார்.

பெட்ரோல், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.

பெட்ரோலியப் பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், ஜிஎஸ்டியை அமல்படுத்தி ஓராண்டே இன்னும் முடியவில்லை. எனவே, வருவாய் குறித்த அச்சத்துடன் மாநில அரசுகள் இருக்கின்றன. அதேநேரம், மாநில அரசுகளும், மத்திய அரசும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது என்றார் பிரதான்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்கள் கொண்டுவரப்பட்டால், அவற்றின் விலை குறைவதுடன், நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை நிலவரம் இருக்கும். இதனால், பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்று பிரதான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com