வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல்: சீன துணை பிரதமர் லியூ ஹி

வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா முடிவெடுத்துள்ளது என்று சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.
வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல்: சீன துணை பிரதமர் லியூ ஹி

வர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா முடிவெடுத்துள்ளது என்று சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை கூட்ட முடிவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்டவைக்கு கூடுதல் வரி என சீனா அறிவித்துள்ளது.

“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.

இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டினார்.

டிரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு சீனா 25% வரி விதித்திருந்தது மேலும் வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளி விடக்கூடாது என சீனா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ட்ரம்ப் - லியூ கி சந்திப்பு நடைபெற்றது. வர்த்தக பிரச்னைகள் தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின் போது சுமூக முடிவு எட்டப்பட்டதாக சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com