வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மாருரோ 60 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி

வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மாருரோ 60 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 
வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மாருரோ 60 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி

கராகஸ்: வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மாருரோ 60 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது. 

இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர். அவர் மேலும் 6 ஆண்டுகளுக்கு பதவியில் நீட்டிப்பார்.

மதுரோ ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளதோடு வடகொரிய அதிபர் கிம் ஜான்-உன், சிரிய அதிபர் ஆசாத் ஆகியோருக்கு பிறகு மதுரோ மீது அமெரிக்கா தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com