இன்று மாலை கோட்டை முற்றுகை போராட்டம்: தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அறிவிப்பால் போலீஸார் குவிப்பு

இன்று மாலை கோட்டை முற்றுகை போராட்டம்: தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அறிவிப்பால் போலீஸார் குவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் இன்று மாலை கோட்டை முற்றுகைப் போராட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் இன்று மாலை கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளதால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியிடல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தூக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாரதிராஜா, வேல்முருகன் தலைமையில் இன்று மாலை பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, அண்ணா சிலை, உழைப்பாளர் சிலை, போர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் தாண்டிச் செல்ல முடியாத வகையில், இரு கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com