தூத்துக்குடி நகர பகுதியில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன

தூத்துக்குடியில் அமைதி நிலைநாட்டும் விதமாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
தூத்துக்குடி நகர பகுதியில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன

தூத்துக்குடியில் அமைதி நிலைநாட்டும் விதமாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,. மக்கள் பிரதிநிதியாக தூத்துக்குடி நகர முக்கிய பிரமுகர்கள், வணிகர்சங்க நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி தொழில் வா்த்தக சபை நிர்வாகிகள், பாதிரியர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கடைகள் திறக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள அம்மா உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது.  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com