நிபா வைரஸ்: கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை
நிபா வைரஸ்: கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸானது, அந்த மாநிலத்தை மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.  அண்மையில் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. அவர்களில் செவிலியர் ஒருவரும் அடக்கம்.
இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பரம்புரா பகுதியைச் சேர்ந்த மூசா என்பவர் சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். இதனால் நிபா வைரஸ்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com