பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது: தர்மேந்திர பிரதான்

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால வழிகளை பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. 

கர்நாடகா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. நாடு முழுவதும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை தமிழகத்தில் 80 ரூபாய்க்கு மேல் தாண்டியுள்ளது. 

செவ்வாய்கிழமை பெட்ரோலின் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.80.11 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ. 72.14 ஆகவும் விற்பனையாகிறது. 

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அசு ஆலோசித்து வருகிறது. ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது தான் சிறந்த வழி என்றும் இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com